districts

தஞ்சை கடைகளில் தடை செய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தஞ்சாவூர், ஏப்.2 - தஞ்சாவூரில் வெள்ளிக் கிழமை பல்வேறு இடங்க ளில் மாநகராட்சி அதிகாரி கள் திடீர் சோதனை நடத்தி, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததுடன், அபராதமும் விதித்தனர்.  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், மக்காத தன்மை கொண்ட, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட் களுக்கு தமிழக அரசு தடை  விதித்துள்ளது. ஆனாலும் வியாபாரிகள் இந்த பிளாஸ் டிக் பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, தஞ்சாவூர் மாநக ரில் அதிகரித்த வண்ணம் காணப்பட்டதால், மாநகரம்  முழுவதும் இரண்டு குழுக்க ளாக பிரிந்து அதிரடியாக ஒவ்வொரு கடையாக மாநக ராட்சி அதிகாரிகள் சோதனை யில் ஈடுபட்டனர். அதன்படி  தஞ்சாவூர் அய்யங்கடைத் தெருவில் மாநகராட்சி அதி காரிகள் சோதனையிட்ட போது, அங்கு ஒரு கடையில் மட்டும் 2 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  மேலும், பல்வேறு கடைகளில் இருந்த  பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  தொடர்ந்து கீழவாசல், கரந்தை, கொண்டிராஜ பாளையம், மானம்புச் சாவடி, கல்லுகுளம், மருத்து வக் கல்லூரி சாலை ஆகிய  பகுதிகளிலும் வெள்ளியன்று ஒரே நேரத்தில் அதிரடியாக மாநகராட்சி அதிகாரிகள் கள மிறங்கி ஆய்வு செய்தனர். இதில் 5 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உடனடியாக, அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு  சிமெண்ட் தயாரிக்க மூலப் பொருளாக மாநகராட்சியின் குப்பை லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.