கும்பகோணம்/பாபநாசம், ஏப்.29 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சைக்கிள் பிரச்சார பயணம் ‘இளை ஞர்களுக்கு வேலை கொடு’ என்ற கோரிக்கையை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் நான்கு முனைக ளிலிருந்து சைக்கிள் பயணம் புறப்பட்டு திருச்சியில் மே 1 ஆம் தேதி சங்க மிக்கிறது. இந்த பயணத்தின்போது, மக்களு டைய கோரிக்கைகளை விளக்கியும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உரு வாக்க கோரியும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டு ஒன்றிய அரசாங்கத்தின் மோசமான கொள்கை களைப் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டும் வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, பாண்டிச் சேரியில் இருந்து மாநில துணைச் செய லாளர் சிங்காரவேலன் தலைமையில் துவங்கிய பிரச்சார பயணம், தஞ்சை மாவட்டத்தின் வடக்கு எல்லையான திருச்சேறையில், தஞ்சை மாவட்ட வாலி பர் சங்கம் சார்பில் பறை இசையுடன் வானவேடிக்கையுடன் உற்சாகமாக வர வேற்கப்பட்டது. பயணக் குழுவின் வரவேற்பில் தஞ்சை மாவட்ட தலைவர் ஏசுராஜன், மாவட்டச் செயலாளர் அருளரசன், மாவட் டப் பொருளாளர் ராமன், திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய பொறுப்பா ளர்கள், மாணவர் சங்க மாநில செயலா ளர் அரவிந்தன், மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் சிறப்பான வர வேற்பு அளித்தனர். அதனைத் தொ டர்ந்து வழியெங்கும் நாச்சியார்கோயில் திருநறையூர், கும்பகோணத்தில் வர வேற்பு அளிக்கப்பட்டது. திருநறை யூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நோன்பு கஞ்சி மற்றும் சிற்றுண்டி வழங்கி வரவேற்றனர். இறுதியாக கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ராமன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத் தில் வாலிபர் சங்க மாநில துணைத் தலை வர் கே.பி.ஜோதிபாசு, மாநில செயற் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் வி.லீலாவதி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
பாபநாசம்
பாபநாசம் வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சார பயணக் குழுவிற்கு பாபநாசத்தில் வர வேற்பளிக்கப்பட்டது. சைக்கிள் பிரச்சார பயணக் குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் வரவேற் பளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்டக் குழு உறுப்பினர் காதர் ஹீசைன், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.