districts

img

தஞ்சை மாநகரில் 47 ஆயிரம் வீடுகளுக்கு இன்று முதல் தேசிய கொடி வழங்கல்

தஞ்சாவூர், ஆக.12-  தஞ்சாவூர் மாநகரில் உள்ள 47 ஆயிரம் வீடுகளுக்கு சனிக்கிழமை முதல் மூவர்ண தேசியக் கொடி வழங்கப்படவுள்ளது. இதை யொட்டி வெள்ளிக்கிழமை தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என அரசு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும்  ஆக.13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை  பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடியை  ஏற்றி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.  அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 47 ஆயிரம் வீடுகளுக்கும் இலவசமாக  தேசியக் கொடியை வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன் துவக்க நிகழ்வாக வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் ரயிலடியில் இருந்து, மூவர்ண தேசியக் கொடியுடன் விழிப்புணர்வு பேரணி தொடங் கியது. பேரணியை மாநகர மேயர் சண்.ராம நாதன் தொடங்கி வைத்தார். ஆணையர் க.சர வணக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி பணியாளர்கள், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண் டனர். தேசியக் கொடியுடன் புறப்பட்ட பேரணி, பழைய நீதிமன்றம் சாலை வழியாக  பெரிய கோயிலை அடைந்தது. அங்கு தேசியக் கொடியை அனைவரும் போற்றி பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை மூன்றடி  கம்பில் கட்டி, அதனை கல்லூரி மாணவிகள்  மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் முன்னேற் பாடு பணிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை (ஆக.13) முதல் தஞ்சாவூர் மாநகரில் உள்ள  வீடுகளுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட  உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.