districts

ஜூலை 25 தஞ்சையில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி பங்கேற்பு

தஞ்சாவூர், ஜூலை 3- தஞ்சையில் ஜூலை 25 (திங்கள்கிழமை) அன்று, ‘மக்கள் கோரிக்கை விளக்க நிதி யளிப்பு பொதுக் கூட்டம்’ நடைபெற உள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாவட்டக் குழு கூட்டம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் க.அருளரசன் தலைமை யில், தஞ்சை கணபதி நகர் கட்சி அலுவலகத் தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலச்  செயற்குழு முடிவுகளை விளக்கி மத்தியக்  குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார். கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்  கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன் கூறுகையில், “ஜூலை 25 ஆம் தேதி தஞ்சையில் ‘மாவட்ட மக்கள் கோரிக்கை விளக்க நிதி அளிப்பு பொதுக்கூட்டம்’ நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இதில், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும்  தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  இப்பொதுக் கூட்டத்தில், மாவட்டம் முழு வதுமிருந்து பல்லாயிரம் பேர் பங்கேற்கின்ற னர். தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், முறைசாரா மற்றும் முறை சார்ந்த தொழிலாளர்கள், நெசவு, சிறு தொழில், மீனவர்கள், வணி கர்கள், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து  வருகின்றனர். இதையொட்டி, இம்மாத இறுதிக்குள் 400-க்கும் மேற்பட்ட இடங்க ளில் உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்க வலியு றுத்தி மக்கள் இயக்கம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.