districts

img

குத்துவிளக்கு தொழிலாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கும்பகோணம், பிப்.24- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் குத்துவிளக்கு தயாரிப்பில் முதன் மையாக உள்ளது. இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பித்தளை குத்து விளக்குகள் உலகம் முழுவதும் சென்று வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நாச்சியார்கோவில் மேல புது தெருவில் சுமார் 35 ஆண்டு களாக குத்துவிளக்கு உற்பத்தி குடிசை தொழிலில் ஈடுபட்டு வரும் தம்பி ராஜேந்திரன் என்பவர் கலையைமிக்க நகாசு வேலைப் பாடுகள் கொண்ட குத்துவிளக்கு தயாரிப்பில் முன்னோடி யாக இருந்து வருகிறார்.  இவரது மகன்கள் ராஜசேகர், சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கு களை தயாரித்து வெளிநாட்டுக்கு ஏற்று மதி செய்ய சாய் மெட்டல் ஒர்க்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரு கின்றனர். அதே பட்டறையில் தன்னை முதலாளியாக கருதாமல் தொழிலா ளர்களோடு தொழிலாளராக வேலை செய்து வந்தார். அவரது பட்டறையில் 20 வருடங்க ளாக வேலை செய்து வரும் செம்பியவரம்பல் கிராமத்தை சேர்ந்த முத்தையன் என்பவர் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நல குறைவு காரணமாகவும் வேலை செய்ய முடியாமல் இருந்து வந்தார். இந்நிலையில், முத்தையனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தம்பி ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர், முத்தை யனை வீட்டிற்கு அழைத்து புத்தாடை கள் வழங்கியும் சந்தன மாலை அணிவித்து உதவி தொகையாக ரூ.10 ஆயிரமும் ரொக்கமும் வழங்கி கவுரவித்தனர். நாச்சியார்கோயில் குத்துவிளக்கு தொழிலாளிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.