districts

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஏப்.19- அரசுப் பணியில் 01.04.2003 முதல் பணியமர்த் தப்பட்ட அனைவரையும், பழைய ஓய்வூதியத் திட்டத் தின் கீழ் கொண்டுவர வேண் டும் என்பன உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் தர்ணா போராட் டம் நடைபெற்றது.  தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், ஒரத்தநாடு, திரு வையாறு, பூதலூர், திரு விடைமருதூர், கும்பகோ ணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோபால், மாவட்ட தலை வர் கலியமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் பூபதி உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற போராட்டத்தி ற்கு வட்டத் தலைவர் ப.ராஜா ராமன் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் வ. பழனிவேலு, ஒன்றியச் செய லாளர் வாசுகி, ஒன்றியத் தலைவர் செல்லத்துரை, வட்டச் செயலாளர் கே. செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் ரயில் நிலை யம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் துணை தலைவர் கோ. பொது செல்வன் தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் குரு.சந்திரசேகரன் விளக்கிப் பேசினார். ஆர். கணபதி, மாவட்டச் செய லாளர் வீ.முனியன், மாவட்டப் பொருளாளர் கோ.மீனாட்சி சுந்தரம், மாவட்ட இணை செயலாளர் ஆர்.தியாகராஜன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.