தஞ்சாவூர், ஜூன் 16 - ஒரத்தநாடு அருகே பாசன வாய்க்காலை தூர் வாரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், பொதுமக்கள் தன் னெழுச்சியாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில், கல்லணைக் கால்வாய், ராஜாமடம் 3 ஆம் நம்பர் பிரிவு வாய்க்காலை தூர்வாரி பாசனத்திற்கு பயன் படும் வகையில் மேம்படுத்தி தர வேண்டும் என வலி யுறுத்தி, கடந்த 10 ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பொதுப் பணித்துறை அதிகாரிகளி டம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது. அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆவேச மடைந்த, பொதுமக்கள் தன் னெழுச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். ஒரத்தநாடு ஒன்றியம், ஆழியவாய்க்கால் ஊராட்சி தெற்கு நத்தம் கிராமத்தில், ஒரத்தநாடு - வல்லம் நெடுஞ்சாலையில் நடை பெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, சிபிஎம் ஒரத்தநாடு ஒன்றியச் செய லாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.பெர்னாட்சா, விதொச ஒன்றியத் தலைவர் ஜெய் சங்கர், கிளை செயலாளர் செந்தில் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சூர்யா, போராட் டக் குழுவினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தக வலை தெரிவித்தார். இதில், 3 நாட்களுக்குள் தூர்வார நடவடிக்கை எடுக் கப்படும். மாலை பொதுப் பணித்துறை பொறியாளர் மற்றும் அலுவலர்களை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என காவல்துறையினர் தெரி வித்தனர். இதையடுத்து சுமார் 1 மணி நேரம் நடை பெற்ற சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.