கும்பகோணம், மார்ச் 7- தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணாரக்குடி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இதனால் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கண்ணாரக்குடி ஊராட்சி யில் சாதி ஆதிக்க வகுப்பினர் அரசு புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர். இதை அறிந்த தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் அரசு அதிகாரிகளிடம் முறை யிட்டு, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் தங்களுக்கு குடிமனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள், சாதி ஆதிக்கத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்தனர். இந்நிலையில் சாதி ஆதிக்கத்தினர் குடிசைகளை பிரித்தெறிந்து தகராறில் ஈடு பட்டனர். அப்போது அதிகாரிகள் தலை யிட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனை வருக்கும் குடிமனைப் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.
பின்னர், கடந்த புதன்கிழமை சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, திருப்ப னந்தாள் ஒன்றிய செயலாளர் டி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கும்பகோணம் கோட்டாட்சியரிடம், ‘வீடு இல்லாமல் இருக்கும் தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்க ளுக்கு குடிமனை வழங்க வேண்டும் எனக் கோரி, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சாதி ஆதிக்க வகுப்பினரை அப்புறப்படுத்த வேண்டும்’ என தெரி வித்தனர். அதற்கு கோட்டாட்சியர், சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகளிடம் தங்கள் மனுக்களை கொடுங்கள், பின்னர் அதன் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிலையில் கண்ணாரக்குடி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தினேஷ் தலைமையில் சசிகலா, தன லட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை யில், குடிமனை கேட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சாமிக்கண்ணு, ஏ.எஸ்.பாரதி, வெற்றிச்செல்வி ஆகியோர் கண்ணா ரக்குடி கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தனர். மேலும் உடனடியாக நடவ டிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட் டங்களில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்த னர்.