districts

தண்டரை தலித் மக்களுக்கு குடிமனை கேட்டு ஆட்சியரிடம் மனு

செங்கல்பட்டு, மே 09 – குறுகிய இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வருவதால் மாற்று இடத்தில் குடிமனை வழங்க வலியுறுத்தி தண்ட ரை கிராம தலித் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரி க்கை மனுவினை வழங்கி னர். செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூர் வட்டம் தண்டரை ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள்  ஒரு ஏக்கர் நிலத்தில்  கடந்த 40 ஆண்டுகாலமாக குடியி ருந்து வருகின்றனர். நாளு க்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத் தின் காரணமாக மேலும் குடியிருப்புக்கள் அமைத்து வாழ போதிய இடவசதி யின்றி  சிரமப்படுகின்றனர். ஊராட்சிமன்றம்  சார்பில் கடந்த  மே1 அன்று  நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் குடியிருப்புக ளுக்கான இடம் வழங்குவ தற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ஹரி ஹரன் தலைமையில் சுமார் 100 குடும்பங்களைச் சார்ந்த வர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ர.ராகு ல்நாத்திடம் கோரிக்கை மனு வினை வழங்கினர். அம்மனுவில்  ஆதிதிராவிடர் நலத்துறை அல்லது அரசு சார்பில்  தங்களுக்கு குடியி ருக்க நிலம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளனர்.  மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக  குடியிரு ப்புக்கான நிலத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.