காஞ்சிபுரம்,செப். 16 பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சார்ந்த இருளர் இன மக்கள் குடி மனை கேட்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்ட த்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் புத்தி ரன்கோட்டை பொரியார் நகர், காஞ்சி வட்டம் ஏரிவாக்கம், திருப்போரூர் வட்டம் தையூர், ஆலத்தூர், சின்னகாயார், கரும்பாக்கம், குப்பத்துக்குன்று உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சார்ந்த இருளர் இன மக்கள் தங்கள் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இடத்திற்குக் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் என்றும் குடிமனை பட்டா இல்லாததால் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியவில்லை என்றும், மின்சார வசதி, இனச்சான்றி தழ், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா இரா.சரவணன், மாவட்டத் தலை வர் அழகேசன், மாவட்டச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்த னர் இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா இரா.சரவணன் கூறுகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா இன்று வரை வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால் கல்வி உதவித் தொகை பெற முடியாமல் இருளர் இன மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். வாலாஜாபாத் ஒன்றி யத்திற்குட்பட்ட காமராஜ புரத்தில் குடிமனை பட்டா இல்லாத காரணத்தால் தொகுப்பு வீடுகளுக்கு விண்ணப்பித்தும் வீடு வழங்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு தற்போது குடி மனைகுறித்து வெளி யிட்டுள்ள அரசாணையைப் பயன்படுத்தி மாற்று இடம் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் இந்த அரசாணையின் மூலம் இருளர் இன மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.