districts

img

நரிக்குறவர் இன மக்களுக்கு வங்கிக் கடன்

தஞ்சாவூர், அக்.18-  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், புதுக்குடி ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் விளிம்பு நிலை மக்கள், தங்கள் வாழ்வாதாரம் மேம்பட, பாரம்பரிய தொழிலான பாசிமணி, வளையல், காது வளையம் போன்ற தொழிலை மேம் படுத்தும் நோக்கில், வங்கி கடன் வழங்க வேண்டும் என உதவி கோரி மாவட்ட ஆட்சி யரிடம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு  அளித்தனர்.  இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகு மூலம் நேரில்  சந்தித்து, கள ஆய்வு செய்து 42 விண்ணப் பங்கள் பெறப்பட்டு, வங்கி பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், விண்ணப் பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இந்தியன்  ஓவர்சீஸ் வங்கி (13) மற்றும் ஸ்டேட் பேங்க்  ஆப் இந்தியா வங்கி (5) மூலம், 18 பேருக்கு  தலா ரூ.50 ஆயிரம் வீதம் தனிநபர் கடன், மாவட்ட தொழில் மைய மானியத்துடன் வழங்கப்பட்டது.  அப்போது மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தஞ்சை மண்டல  மேலாளர் ஆல்வின் மாட்ரின் ஜோசப், இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா நாயர் ஆகியோர் உடனி ருந்தனர்.