தஞ்சாவூர், மார்ச் 30- தஞ்சாவூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்திற்கு லுங்கி, கால்சட்டை, நைட்டி அணிந்து வர தடை விதித்த கிராம நிர்வாக அலுவலர் தற்காலிகமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில், முன்னாள் விமானப்படை வீரரான கரிகாலன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார். இவர், அலுவலகத்துக்கு சான்றிதழ்கள் கேட்டு வரும் நபர்கள், லுங்கி, கால் சட்டை, பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்தார். மேலும், லுங்கி அணிந்து வருபவர்களை அலுவலகத்தில் உள்ளே விட மறுப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், விவசாயி ஒருவர், தனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு சென்ற போது, அவர் லுங்கி அணிந்து இருந்ததால், அலுவலகத்துக்கு அனுமதிக்கப்படாமல் வெளி யிலேயே காக்க வைக்கப்பட்டார். இவ்வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதனால், கிராம நிர்வாக அலு வலர் தற்காலிகமாக பணியில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்.