தஞ்சாவூர், ஜூன் 10 - தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடி நிதியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களுக்காக காத்திருப்பு கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சாவூர், அரிய லூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப் பட்டினம், திருவாரூர் ஆகிய அண்டை மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளி களாக அனுமதிக்கப்பட்டவர்களுடன் வரும் உறவினர்கள், உதவியாளர்கள் ஆகியோர் சிகிச்சை பெறும் பிரிவில் தங்க அனுமதி இல்லை என்பதால், அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரத்தடி நிழல்களில் தங்கி காத்தி ருக்கின்றனர். இதனால் மழைக்காலங் களிலும், இரவு நேரங்களிலும் நோயாளி களுடன் வரும் உறவினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் பொதுமக்களுக் கான காத்திருப்பு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அடிக்கல் நாட்டு விழா
அதன்படி, வியாழக்கிழமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாநகர மேயர் சண்.ராமநாதன் செங்கல் எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், நிலைய அலுவலர் செல்வம், மாமன்ற உறுப்பினர் சர்மிளா மேரி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் மருத்துவமனை பணியாளர் கள், செவிலியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு நாள்தோறும் ஏராளமா னோர் வந்து செல்கின்றனர். உள் நோயா ளியாக சிகிச்சை பெறுபவரோடு வரு பவர்கள் வெளியில் தங்க போதிய இட மில்லை என பொதுமக்கள் தெரிவித்த னர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தலா 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காத்திருப்பு கூடம் கட்டப்படவுள்ளது. இதில் கழிவறை, குளியல் அறை, பொருட்கள் வைப்பறை ஆகியவை இருக் கும். இந்த கட்டிடத்தை மாநகராட்சி சார்பில் கட்டி மருத்துவக் கல்லூரி நிர்வா கத்திடம் வழங்க உள்ளோம் என்றார்.