தஞ்சாவூர்,நவ.23- தஞ்சாவூர் அருகே குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை யில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர வைப் பணிகள் துவங்கியது. இதனால் விவ சாயிகள் மிகப் பெரிய இழப்பை சந்தித்த னர். இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதத்தில் அரவை பருவத்தை துவக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதை யடுத்து, நடப்பு ஆண்டுக்கான (2022-23) அரவைப்பருவம் புதனன்று துவங்கியது. கரும்பு அரவைப் பணியை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநி மாணிக்கம் துவக்கி வைத்தார். இதில், சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந் தில்குமாரி, கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர்கள் திருப் பதி, கோவிந்தராஜன் உள்ளிட்ட விவசாயி கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து, சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந்தில்குமாரி கூறு கையில், ‘‘நடப்பு ஆண்டு கரும்பு அர வைக்கு 6,525 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.10 லட்சம் டன் கரும்பு கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயி களுக்கு கரும்புக்கான கிரயத்தொகை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பருநாற்று, பரு கரணை மற்றும் விதை கரும்பு நடவு செய்த விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ரூ.8.33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது’’ என தெரி வித்தார். இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், ‘‘எங்களது கோரிக்கையை ஏற்று இந்தாண்டு நவம்பர் மாதம் அரவைப் பணி கள் தொடங்கி இருப்பதை வரவேற்கி றோம். விவசாயிகளுக்கு தடையில்லாமல் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தமிழக அரசின் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப் பட்ட ரூ.195 ஊக்கத்தொகையும், வெட்டுக் கூலி, உரம் என அனைத்தும் விலை உயர்ந்து விட்டதால், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயி ரம் என வழங்க வேண்டும்’’ என்றனர்.