districts

img

குறிச்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தஞ்சை எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் ஆய்வு

தஞ்சாவூர், பிப்.5-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள  குறிச்சி நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழனிமாணிக்கம், தஞ்சை  தெற்கு மாவட்ட திமுக செய லாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணா துரை, பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் ஆகி யோர் சனிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, பேராவூரணி பகுதியில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கூடியிருந்த நூற்றுக்கணக் கான விவசாயிகளிடம் கேட்  டறிந்தனர். குறிச்சி நேரடி நெல் கொள்முதல் நிலை யத்திலும், அதன் அருகிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.  அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் நெல்லின்  ஈரப்பதத்தை பார்க்காமல்,  உடனடியாக விவசாயிகளி டம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், தினசரி ஆயிரம் மூட்டைகளுக்கு குறையாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என நாடா ளுமன்ற உறுப்பினர் ச.சு. பழனிமாணிக்கம் அறிவு றுத்தினார்.  அங்கிருந்த பாதிக்கப் பட்ட நெல் வயல்களை எம்.பி,  எம்எல்ஏ, அதிகாரிகள் பார் வையிட்டனர். தொடர்ந்து, வேளாண் அலுவலர்களிடம் பாதிக்கப்பட்ட விளை  நிலங்களை கணக்கெ டுத்து நெல், கடலை பாதிப் புகளுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரை வில் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி னர்.