பாபநாசம், டிச.1- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கிராமிய நடனம், வெஸ்டர்ன் நடனம், நாடகம், வாத்தியக் கருவிகள், மெல்லி சைப் பாடல், பேச்சு, கட்டுரை, ஓவியம், சிற்பம் போட்டி கள் நடைபெற்றன. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார், உதவி ஒருங்கி ணைப்பாளர் அல்லி தலைமை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெய மீனா உட்பட ஆசிரி யர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.