districts

img

கலைஞரின் 99 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

கும்பகோணம், ஜூன் 3 - தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் திமுக சார்பில் நடைபெற்றது. தாராசுரம் பைபாஸ் ரவுண்டானா ஆர்ச்சில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் உருவச்சிலைக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் சு.கல்யாணசுந்தரம் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ.இராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், ஒன்றிய செயலா ளர்கள் உள்ளிட்ட மாவட்ட பிரதிநிதிகள், மாநகர நிர்வாகி கள் கலந்து கொண்டனர். தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கும்பகோ ணம் மாநகரம், ஒன்றிய, பேரூர் கிளைக் கழகங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் உருவப் படத்திற்கு மாலை  அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, பொதுமக்க ளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்பு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள புறநோ யாளிகளுக்கு பால், பிரட், பழம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் நிர்வாகி களிடம் பேசுகையில், “ஜூன் 3 முதல் ஜுலை 3 வரை  அரசு மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகளுக் கும், ஆதரவற்ற முதியோர், சிறுவர் இல்லங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாநகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணி அமைப்பாளர் கள், பொதுக் கூட்டங்கள், தெருமுனை பிரச்சார கூட்டங்கள், திராவிட பயிற்சி பாசறை கூட்டங்கள் மற்றும்  நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்து, தங்கள் பகுதி நிர்வாகிகள் அனைவரையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைப்பிடித்து நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்” என்றார். 

அரசு கல்லூரியில் கருத்தரங்கம் 
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடந்த  கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் நா.தன ராஜன் தலைமை வகித்து, அலங்கரிக்கப்பட்ட கலைஞ ரின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி னார். தொடர்ந்து, நடைபெற்ற கருத்தரங்கில், கடலூர் பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் டாக்டர் வீ.பன்னீர் செல்வம், “கலைஞரின் பன்முக ஆளுமை” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் முடச்சிக்காடு ஊராட்சி  இணைந்து “பெருந்திரள் வளாகத் தூய்மைப் பணி முகாம்” நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சக்கர வர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேராசிரி யர்கள், மாணவ, மாணவிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
குடவாசல் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப் படத்திற்கு மாலை  அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திமுக பேரூர் நகர செய லாளர் ஏ.கே.டி.சேரன் தலைமை வகித்தார்.