districts

img

தென்காசி மாவட்டத்தில் சமத்துவப் பொங்கல் திருவிழா

தென்காசி, ஜன.16  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா கடையம், விசுவநாதபுரம், வேம்ப நல்லூர் ஆகிய பகுதிகளில் கொண்டாடப் பட்டது. கடையம் ஒன்றியம் வாகைகுளம் கிராமத்தில்  சமத்துவ பொங்கல் ஒன்றிய துணைச் செயலாளர் சின்னத்தாய் தலை மையில் கொண்டாடப்பட்டது. கிளை மாதர் கள் மற்றும் மாவட்ட நிர்வாகி எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செங்கோட்டை தாலுகா வேம்ப நல்லூரில் நடைபெற்ற சமுத்துவ பொங்கல் விழாவில் தாலுகா செயலாளர் டி. கணபதி மற்றும் கிளை உறுப்பினர்கள் , தென்காசி மாவட்ட தலைவர் எம்.ஆயிஷா பேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். செங்கோட்டை தாலுகா விசுவநாத புரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டா டப்பட்டது செங்கோட்டை தாலுகா பொருளா ளர் ஜெ. செய்யது அலி பாத்திமா தலைமை தாங்கினார், தாலுகா உறுப்பினர்கள் , கிளை தோழர்கள், தெரு மக்கள் கலந்து கொண்டார்கள்.
சிலம்பப் போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு
தென்காசி மாவட்டம் ஆய்குடியில் மாணவர், மாதர், வாலிபர் சங்கங்கள் சமத் துவ பொங்கல் விழா மற்றும் சிறுவர்க ளுக்கான விளையாட்டு போட்டிகள் நடை பெற்றன. இதில்  சிறுவர்கள் சிறுமிகள் பங் கேற்றனர். தோழர் திருவுடையான் இசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடை பெற்றது. பரிசளிப்பு நிகழ்வுக்கு எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர் அருண், பகுதி குழு உறுப்பினர் அழகுராஜ், சுடலை ஆகியோர் தலைமை தாங்கினர். மாதர் சங்க மாவட்டச் செய லாளர் மேனகா, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் மாடசாமி முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஆய்க்குடி காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பக வல்லி, வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் அயுப்கான் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மேனாள் மத்திய குழு உறுப்பினர் மு.சத்யா ஆகியோர் பங்கேற்றனர்.  நேபாளத்தில் நடந்த சிலம்ப விளை யாட்டு போட்டிகளில் தங்கம் , வெள்ளி பதக்கங்கள் வென்ற  தென்காசி மாவட் டத்தை சார்ந்த மத்தளம் பாறை தமிழன் போர் முறை சிலம்பம் வகுப்பு மாணவர் களை கௌரவிக்கும் நிகழ்வு நடை பெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா தேன்பொத்தை கிராமத்தில், மாண வர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் மின்னொளி கபடி போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டி கள் நடைபெற்றது. போட்டிகளுக்கு கிளைச் செயலாளர் சுபாஷ் தலைமை தாங்கினார். மற்றும் போட்டி களை மாவட்டச் செயலாளர் அருண் துவக்கி வைத்தார். மாணவர் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பை மற்றும் மடல் வழங்கி வாழ்த்துக்கள் தெரி விக்கப்பட்டது. மாதர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆயிஷா பேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.