தாராபுரம், மே 15 - தாராபுரத்திற்கு அறிவிக்கப் பட்ட மாவட்ட மருத்துவமனை காங்கயத்திற்கு மாற்றம் செய்யப் பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த அக்டோ பர் 26 ஆம் தேதி ரூ.960 கோடி செலவில் வட்டார மருத்துவமனை கள் மாவட்ட தலைமை அரசு மருத் துவமையாக தரம் உயர்த்தப்ப டும் என்றும், ஒன்றிய அரசு நிதியு டன் நவீன மருத்துவ உபகரணங் கள் மற்றும் போதிய கட்ட மைப்புகளுடன் மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட் டம் பழனி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங் களில் வட்டார மருத்துவமனை கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த் தப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில், திருப் பூர் மாவட்டம், காங்கயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கயம் பகுதி பொதுமக்கள் அவசர சிகிச்சை எடுக்க ஏது வாக திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை 24 கிமீ தொலை விலும், பெருந்துறை அரசு மருத்து வமனை 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
ஆனால், தாராபுரம் பகுதி பொதுமக்கள் அவசர தேவைக்கு சிகிச்சை செல்ல வேண்டும் என்றால், 48 கி.மீ தொலைவில் உள்ள திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கும், 80 கி.மீ தொலைவில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட தலைமை மருத்துவமனை, தாராபுரத்திற்கு அறிவிக்கப்பட்டு காங்கயத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்தும் மீண்டும் தாராபுரத்தில் மாவட்ட மருத்துவமனையை அறி விக்க வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள், அரசியல் இயக் கங்கள் திங்களன்று (மே 15) முதல் தாராபுரம் அண்ணாசிலை முன்பு காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ள தாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற் கொண்ட ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் பத்திரிக்கையா ளர்கள் இதுகுறித்து கேட்டபோது, தமிழக முதல்வரிடமும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிட மும், தாராபுரத்தில் மீண்டும் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக் கையை விடுத்துள்ளோம். கோரிக்கையை பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார் என்று பதிலளித்தார்.