districts

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரை தளத்தை மேம்படுத்தும் பணி

சீர்காழி, பிப்.28  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரை தளம், படகு அணையும் தளம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டிருந்தன. இதில் துறைமுக வளாகத்தில் உள்ள தரைப்பகுதிக்கு போடப்பட்டிருந்த கான்கிரீட் உடைந்திருந்ததால், பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று பழையாறு துறைமுகத்தில் தரைத்தளம் மேம்படுத்தும் பணி துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், துறைமுகத்தில் தரைதளம் மேம்படுத்துவதன் மூலம் மழை நீர் தேங்குவது தடுக்கப்படுவதுடன் தேங்கும் மழைநீர் உடனடியாக வெளியேற வசதி செய்து தரப்பட்டுள்ளது என்றனர்.