districts

img

மணல் திருட்டை கண்டித்தவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாமக பிரமுகரை கைது செய்க! சிபிஎம் சாலை மறியல்

சீர்காழி, மார்ச் 27 - கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாமக ஒன்றியக் குழு உறுப் பினரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கிராமத் தைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் லண்டன் அன்பழகன்(55). இவர் மயிலாடுதுறையின் பாமக முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். தற்போது கொள்ளி டம் ஒன்றிய குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் சிலருடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தொ டர்மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தார்.  இதனை மாதிரவேளூர் கிராமத் தில் கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும்  வழியில் பொதுமக்கள் கும்பலாக  நின்று கண்காணித்துக் கொண்டிருந்த னர். இந்நிலையில் மணல் திருட்டில்  ஈடுபடுவதை கண்டித்து அப்பகுதி யைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விஏஓ ஆசைத்தம்பி என்பவர் எதிர்த்து குரல்  கொடுத்து வந்தார்.  இதனால் கிராம மக்களுடன் சேர்ந்து நின்று கொண்டிருந்த ஆசைத் தம்பியின் மகன் கணேஷ்குமார் (30)  என்பவரை லண்டன் அன்பழகன் மற்றும் அவருடன் சிலர் இருசக்கர வாகனத்தில் வந்து,  லண்டன் அன்பழ கன் தன் கையில் வைத்திருந்த மரக் கட்டையால் கணேஷ்குமாரின் தலை யில் தாக்கினார். இதில் கணேஷ் குமார் படுகாயமடைந்து மயங்கி கீழே  விழுந்தார். பலத்த காயமடைந்த கணேஷ்குமார் சீர்காழி அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர், பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து தகவலறிந்த கொள் ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ்  மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து சனிக் கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன் தலைமையில், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜீ.ஸ்டாலின், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங் காரவேலன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.சிம்சன், கொள்ளிடம் ஒன்றியச்  செயலாளர் கே.கேசவன், சீர்காழி ஒன்றிய செயலாளர் கே அசோகன், தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, செம்ப னார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், குத்தாலம் ஒன்றிய செயலாளர் சி.விஜயகாந்த் மற்றும்  கட்சியின் மாவட்ட குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செய லாளர்கள் கொள்ளிடம் கடைவீதியில்  சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும்  தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாமக உறுப்பினர் லண்டன்  அன்பழகனை கைது செய்யக் கோரி  முழக்கமிட்டனர். தகவலறிந்த சீர்காழி  டிஎஸ்பி லாமேக், கொள்ளிடம் இன்ஸ் பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக் டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர்.  அன்பழகனை கைது செய்தால் தான் சாலை மறியலை கைவிடுவ தாக தெரிவித்து முழக்கம் எழுப்பி னர். தொடர்ந்து 2 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நீடித்தது. முடி வில் போலீசார் லண்டன் அன்பழ கனை கைது செய்வதாக உறுதியளித் ததை தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.