சேலத்தில் தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளுக்கும் உயர்த்தப்பட்ட செமஸ்டர் தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சே. பவித்ரன் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் நவீன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.