tamilnadu

img

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வை வாபஸ் பெறுக.... தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை....

திண்டுக்கல்:
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழ கத்தில் தேர்வு கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் பேரா.சோ.சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். இததொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 7  மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் அன்னைதெரசா மகளிர் பல்கலை.யில் இணைவு பெற்றுள்ளன. இக்கல்லூரிகளில் சுமார் 12,000த்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், இவர்களுக்கு ஜூன்,  ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள இணையவழி பருவத் தேர்வு கட்டணத்தை திடீரென ரூ.100 உயர்த்தி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரங்களுக்கு சிரமப்பட்ட போதிலும், பெரும்பாலான மாணவ-மாணவிகள் உயர்கல்வியை சிரமப்பட்டு தொடர்கின்றனர். வழக்கமாக நடத்தப்படும் தேர்வுகளின் செலவைக் காட்டிலும் இணைய வழித் தேர்வுகளுக் கான செலவு குறைவாகவே உள்ளது.இந்நிலையில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், பெருந்தொற்று காலத்தில் தேர்வு கட்டணத்தை உயர்த்தி இருப்பது, மாணவிகள் உயர்கல்விக்கான வாய்ப்புகளை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே,பல்கலைக்கழகம் நிர்வாகம் உயர்த்திய கட்டணத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.  மேலும்பல்கலைக்கழகம், அரசின் விதிமுறைகளை மீறி முதலாமாண்டு மாணவிகளுக்கான கடந்தபருவத் தேர்வுகளை பிப்ரவரி, மார்ச்  மாதங்களில்கல்லூரி வளாகத்திலேயே நடத்தியது என்பதுகுறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.