சேலம், டிச.31- அரசு மாணவிகள் விடுதியில் பணியாற்றிய காவலரின் பணி ஓய்வு நாளில் துணை ஆட்சியர் வாகனத்தில் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதி அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் காவலராக ஜாக்குலின் என்பவர் 35 ஆண்டுகள் பணியாற்றி டிசம்பர் 31ஆம் தேதி பணி நிறைவு செய் தார். அவரின் பணியை போற்றும் விதத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து ஓய்வு பெறும் ஆணையை வழங்கி னார். மேலும், அரசு வாகனத்தில் முன் இருக்கையில் அமர வைத்து வீட்டுக்கு வழி அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் ஜாக்குலின் குடும்பத்தினர், அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் வட்டக் கிளை செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.