சேலம், ஏப்.8- நங்கவள்ளி பேரூராட்சி பாசக்குட்டை பகுதியில் மயான வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி பேரூராட்சிக் குட்பட்ட பாசக்குட்டை பகுதியின் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் என்.ஆர்.ராஜகோபால். இவரின் தாயார் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய உரிய மயான வசதி இல்லை. இதையடுத்து நங்கவள்ளி மேட்டூர் பிரதான சாலையில் அவரது உடலை அடக் கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் வட் டாட்சியர், ஓமலூர் டிஎஸ்பி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத் தினர். இதில், இன்னும் பத்து நாட்களுக்குள் இப்பகுதிக்கான மயான வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று எழுத்துபூர்வமான வாக்குறுதி அளித்தனர். இதனால் போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது. முன்னதாக, இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.ராஜாத்தி, மு.பெரியண் ணன், கே.கவிதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட உதவி தலைவர் பி.தங்கவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஆர். வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன் ஆகி யோர் என்.ஆர். ராஜகோபால் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.