கோவை, டிச.24- பள்ளி மாணவிகளுக்கு பாலி யல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவையில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். இப்பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக விஜய் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகி றார். இவர் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகளின் போது, மாணவிக ளுக்கு தனியாக வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாண விகள், தலைமையாசிரியரிடம் புகா ரளித்துள்ளனர். ஆனால், புகார் அளித்து ஒரு வாரத்திற்கும் மேலாகி யும் ஆசிரியர் மீது எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இத னால் ஆவேசமடைந்த மாணவர்கள் வெள்ளியன்று திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த காவல்துறையினர், கோவை மாவட்ட கல்வி அலுவலர் கீதா ஆகி யோர் பள்ளிக்கு வந்து மாணவிகளி டம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட ஒரு மாணவி கல்வி அலுவலரிடம் கதறி அழுது கண்ணீர் மல்க விபரத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி யிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதனை யடுத்து மாணவர்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.