இராமநாதபுரம், மார்ச் 4- இராமநாதபுரம் மாவட்டம் பர மக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் பலாத்கா ரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதிமுக கவுன் சிலர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரமக்குடியில் தனியார் பள்ளி யில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த ஒரு மாதகாலமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டி லேயே இருந்துள்ளார்.இது குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்தனர்.அப்போது அப்பகு தியைச் சேர்ந்த கயல்விழி மற்றும் உமா (என்ற) அன்னலெட்சுமி ஆகி யோர் தன்னை சில நபர்களிடம் அழைத்துச் சென்றதாக தெரிவித் தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக இராம நாதபுரம் காவல்துறை கண்கா ணிப்பாளரிடம் புகார் மனு அளித்த னர். உடனடியாக இதுகுறித்து முழு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பரமக்குடி அனைத்து மக ளிர் காவல்நிலையத்திற்கு போலீஸ் எஸ்.பி. உத்தரவிட்டார் இதைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வா ளர் சுதா தலைமையில் மாணவி யிடம் தனி விசாரணை நடத்தினர். அதில் பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவர் மற்றும் பர மக்குடி நகர்மன்ற உறுப்பினரு மான சிகாமணி, மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகர், ராஜா முகமது ஆகியோர் தன்னை கடத்திச் சென்று பார்த்திபனூர் அருகே உள்ள தங்கும் விடுதியில் பல முறை கும்பலாக பலாத்காரத் திற்கு ஆளாக்கியதாக தெரி வித்தார். இதை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட சிகாமணி, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது மற்றும் இதில் ஈடுபட்ட உமா மற்றும் கயல் விழி ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்தனர்.
நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துக! சிபிஎம் நாளை பரமக்குடியில் ஆர்ப்பாட்டம் |
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர். வி.காசி நாததுரை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பரமக்குடியில் பள்ளி மாண வியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராம நாதபுரம் மாவட்டக்குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நடவடிக்கையை யொட்டி ஏராளமான மாணவிகள் - பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக கருத்துக்கள் பரலாகி வருகிறது. இன்னும் சில தனியார் கட்டிடங்களில் அரசியல் பிரமுகர் மற்றும் அதிகாரிகளே பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்திகள் பேசப் படுகிறது. எனவே சிலந்தி வலை பின்ன லாக மாறிவரும் பரமக்குடி பாலி யல் பலாத்காரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க, தொடர் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதவியில் உள்ள நீதிபதி தலைமையிலான விசா ரணை கமிஷனை தமிழக அரசு நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்ச் 6 ஆம் தேதி பர மக்குடியில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார். |
மாதர் சங்கம்
இத்தகைய குற்றச்செயலில் நிகழ்ந்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்த போது இக்கொடிய நபர்களின் பின்னணியில் இன்னும் பலர் இருக்கிறார்கள் என்பதும் இந்த பாலியல் துன்புறுத்தல் நீண்ட காலமாக நடைபெற்று வருவதா கவே தெரிகிறது. இதனால் பாதிக் கப்பட்ட பெண்குழந்தைகள் எண் ணிக்கையும் கூடுதலாக இருக்க லாம் என்ற சந்தேகம் பரமக்குடி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பயந்து அவர்களது பெற்றோர் கள் புகார் அளிக்க வராமல் இருந்தி ருக்கலாம். இந்த குற்றச்செயல் தொடர்புடைய எவரும் தப்பிவிடாத படி பணியில் இருக்கும் மூத்த பெண் நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொணர வேண்டும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர் வெளியில் ஊடகங்களில் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண் டும் அவர்களது கல்வி தடைபடாத அளவிற்கான நிதி உதவிகளை அரசு செய்திட வேண்டும் மாநில அரசு இது விஷயத்தில் கவனம் செலுத்தி விசாரணையில் தேவை யற்ற தலையீடுகளை புறந்தள்ளி நேர்மையான விசாரணை நடை பெறுவதை உறுதிப்படுத்த வேண் டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் இராம நாதபுரம் மாவட்டச் செயலாளர் இ. கண்ணகி வெளியிட்டுள்ள அறிக் கையில் வலியுறுத்தியுள்ளார்.