இராஜபாளையம்,பிப்.10- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விசைத்தறி தொழி லாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து பல கட்ட போராட் டங்களை நடத்தி வருகின்றனர் . பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு வழங்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை யன்று விசைத்தறி தொழிலாளர்க ளின் மகாசபை கூட்டம் நடை பெற்றது. கூட்ட முடிவின் அடிப்படை யில் முத்துசாமியாபுரத்தில் இருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாக கிளம்பி விசைத்தறி உரிமையா ளர்கள் சங்கத்தின் தலைவர் ராதா கிருஷ்ணன் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், ஒன்றியச் செயலாளர் சந்தன குமார், சிபிஐ சார்பில் அய்யனார் கணேசமூர்த்தி மற்றும் தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.