இராஜபாளையம், ஜூன் 16- இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சிவலிங்கா புரத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சுழற்சி முறை என்ற பெயரில் இரண்டு பிரி வாக வேலைசெய்த 300 தொழி லாளர்களை பெண்கள், ஆண் கள் என நான்கு பிரிவாக பிரித்து ஒருமாதத்திற்கு 12.நாட்கள் வேலைக்கான ஏற்பாட்டை செய்த பஞ்சா யத்து முடிவைக் ண்டித்து சிவ லிங்காபுரம் பஞ்சாயத்து அலு வலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கம் சார்பில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கீழராஜகுல ராமன் காவல்துறை உதவி ஆய்வாளர் நடத்திய பேச்சு வார்த்தையில் இரண்டு பிரி வாக வேலை செய்யலாம் என வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், பணித்தள பொறுப்பாளர். ஆகியோரிடம் பேசப்பட்டு உறுதி செய்யப்பட்டது. எழுத் துப்பூர்வமாக ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி எழுதிக் கொடுத்தார் காத்திருக்கும் போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, ஒன்றிய தலைவர் பொன் ராஜ், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி சிபிஎம் ஒன்றிய செயலாளர் முனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.