புதுக்கோட்டை, பிப்.17- புதுக்கோட்டையில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக நாம் தமிழர் கட்சி யின் வேட்பாளர் உட்பட 6 பேரை காவல் துறையினர் புதனன்று கைது செய்தனர். புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ச.அப்துல் மஜீத் (33). இவர், புதுக்கோட்டை நகராட்சியில் 23-ஆவது வார்டில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வந்த தகவலின் பேரில், புதுக்கோட்டை நகரக் காவல்துறையினர் செவ்வாயன்று இரவு அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, அவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தொடர் விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத், சேது ராமன் மகன் முரளி (36), திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வட்டம் அரு ணாசலபுரத்தைச் சேர்ந்த மயில்ராஜா மகன் சர்மா (20), கன்னிமார்கோவில் தெரு வைச் சேர்ந்த தேரடியான் மகன் நரேந்திர குமார் (27), முருகன்கோவில் தெருவைச் சேர்ந்த நடேசன் மகன் கதிர்வேல் (34), காந்தி நகரைச் சேர்ந்த ஹக்கீம் மகன் மியாகனி (22) ஆகிய 6 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சுமார் 8 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம், 2 தராசு கள், 4 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். புதனன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.