பொன்னமராவதி, செப்.29- புதுக்கோட்டை, அறந்தாங்கி என இரண்டு கல்வி மாவட்டமாக பிரிக்கின்ற போது பொன்னமராவதியை அறந்தாங்கி கல்வி மாவட்டத்துடன் இணைக்கும் முடிவை கைவிட்டு வேண்டும் பெற்றோர் கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இலுப்பூர்-புதுக்கோட்டை என இரண்டு கல்வி மாவட்டங்கள் இருந்ததை மாற்றி தற்போது புதுக்கோட்டை -அறந்தாங்கி என மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் பல்வேறு வகையான சான்றிதழ்கள், நலத்திட்ட உத விகளை பெற 73 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அறந்தாங்கிக்கு சென்று வர வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த காலங்களில் பொன்ன மராவதி ஒன்றியத்தை இலுப்பூரில் இணைப்பதற்கு முன்பாக புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருந்தது. அதைப் போல தற்போது புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் பொன்னமராவதியை இணைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.