புதுக்கோட்டை, ஜூலை 26 - 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பரிசு வழங்கி பாராட்டினார். 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக் கோட்டை நகர்மன்ற வளா கத்தில் வருகிற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அத னையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டி கள் நடைபெற்றன. கந்தர்வகோட்டை வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கான பரிசளிப்பு விழா கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு களை வழங்கி பாராட்டினார். விழாவிற்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ. ஷப்னம் தலைமை வகித் தார். வட்டார கல்வி அலு வலர் வெங்கடேஸ்வரி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆ.முத்துக்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. பழனிவேல் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.