புதுக்கோட்டை, ஜன.30- ஊராட்சிகளில் பணிபுரியும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியா ளர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு சார்பில் திங்கட் கிழமை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழி லாளர் சங்கப் பொதுச் செயலாளர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலா ளர் ஏ.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பேசி னர். ஊராட்சிகளில் பணிபுரியும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணி யாளர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.3 லட்சம், மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தூய் மைப் பணியாளர்களுக்கு 38 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இ.இமானு வேல் தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் பி.ஜேசுதாஸ், மாவட் டப் பொருளாளர் டி.மணிவேல், சிஐ டியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால், மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர் நீதி ஆழ் வார், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மில்லர்பிரபு, ஆட்டோ சங்கம் மாநகரச் செயலா ளர் ஏ.ராஜா ஆகியோர் பேசினர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் ஆட்சியர் அலு வலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் டி.எஸ்.மணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.தங்கமணி, மாவட்டக் குழு உறுப்பினர் எம். குருசாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சங்க மாவட்டச் செயலாளர் கே. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். சிஐ டியு புறநகர் மாவட்ட தலைவர் சம்பத் துவக்கி வைத்தார். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜ், உள்ளாட்சிதுறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பன் னீர்செல்வம், ஊரகவளர்ச்சி உள் ளாட்சித்துறை துணைத்தலைவர் பழனிவேல், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு என்எம்ஆர் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முரளி தலைமை வகித்தார். சம் மேளன மாநிலக் குழு உறுப்பி னர்கள் எம்.பி.டி.லோகநாயகி, டி. கலியமூர்த்தி, மாநில ஒருங்கி ணைப்பு குழு துணை தலைவர் எஸ். காமராஜ், சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் என்.அனிபா உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.