புதுக்கோட்டை, மார்ச் 1- சுதந்திரப் போராட்ட வீர ரும், சிறந்த மேடை நாடக கலை ஞரும், ஜனநாயக மாதர் சங்கத் தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒரு வருமான கே.பி.ஜானகி அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவ ரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் நடை பெற்ற நிகழ்வில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டி செல்வி, செயலாளர் பி.சுசிலா, துணைத்தலைவர் டி. சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
நாகை வடக்கு ஒன்றியம் சிக்கல் ஊராட்சி கீழ்க்கரை யிருப்பில் நடைபெற்ற நிகழ்வில், மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஆர். விமலா, மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.