districts

பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கும் கோவில்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன் 29 - பட்டியலின வழிபட மறுக்கும் கோவில்கள் குறித்து ஆய்வு செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுக்கோட்டை மாவட்ட 4 ஆவது மாநாடு புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.அன்புமணவா ளன் தலைமை வகித்தார். மாநாட்டை  தொடங்கி வைத்து சிபிஎம் மாவட்டச்  செயலாளர் எஸ்.கவிவர்மன் உரை யாற்றினார். மாநாட்டை வாழ்த்தி மாநில  துணைத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, சிபிஐ(எம்எல்) மாவட்டச் செய லாளர் பழ.ஆசைத்தம்பி, அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் மனோ கரன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகி கள் பேசினர். களப்பணிகளின் அறிக் கையை மாவட்டச் செயலாளர் சி.ஜீவா னந்தம் வாசித்தார். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாநில தலைவர் டி.செல்லக்கண்ணு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தலைவராக டி.சலோமி, செயலாள ராக சி.ஜீவானந்தம், பொருளாளராக சு.கவிபாலா, துணைத் தலைவர்களாக பி.சுசீலா, வே.வீரையா, எம்.ஏ. ரகுமான், ஜெகன், துணைச் செயலா ளர்களாக எம்.அசோகன், குமாரவேல், ராஜா, மகாதீர் உள்ளிட்டோர் புதிய  நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்ட னர். சு.கவிபாலா நன்றி கூறினார். சாதி ஆணவப் படுகொலையை தடுத் திட தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து ஆலயங்களிலும் பட்டி யலின மக்கள் வழிபடவும், மறுக்கப் படும் கோவில்கள் குறித்து ஆய்வு செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். வசிப்பதற்கு லாயக்கற்று இடிந்து சேதமடைந்துள்ள காலனி வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடு கள் கட்டிக் கொடுக்க வேண்டும். புதுக் கோட்டை மாவட்டத்தில் நீக்கமற  நிறைந்து கிடக்கும் சாதீய வன்கொடு மைகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதி மறுப்புத் திருமணம்
மாநாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிரியதர்ஷினியும், புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த் திக்குக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.