districts

img

ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றல் கண்காட்சி

புதுக்கோட்டை, ஏப்.23 - புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களின் திறன் களை வெளிப்படுத்தும் விதமாக படைப்பாற் றல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியினை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை யில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  சாமி.சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார்.  கண்காட்சியில் உலக ஏழு அதிசயங்களான சீனப்  பெருஞ்சுவர், தாஜ்மகால் மற்றும் வள்ளுவர் கோட்டம்,  திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட ஏராளமான செயல்முறை கள் காட்சிப் படுத்தப்பட்டன. கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற எஸ்.ராகவ்-க்கு பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற  மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.