புதுக்கோட்டை, அக்.29 - தாட்கோ மூலம் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் விவசாய நிலம் வாங்க மானியம் வழங்கப்படு கிறது. இதுகுறித்து புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ள தாவது: தாட்கோ மூலம் செயல்ப டுத்தப்படும் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின ருக்கான நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ், நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலம் வாங்க திட்ட தொகை யில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப் படும். புதுக்கோட்டை மாவட் டத்திற்கு ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு 03, பழங் குடியினர் வகுப்பினருக்கு 01 எனவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆதிதிரா விட இனத்தை சேர்ந்த மக ளிருக்கு முன்னுரிமை அளிக் கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவன் அல்லது மகன்கள் விண்ணப் பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 65 வயதிற் குள்ளாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் வாங்க உள்ள நிலத்தை விண்ணப்ப தாரரே தேர்வு செய்ய வேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இத் திட்டத்தின்கீழ் நிலமற்ற வர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். வாங்கப்படும் நிலத் தினை விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சத வீதம் அல்லது அதிகபட்ச மாக ரூ.5 லட்சம் வரை மானி யம் விடுவிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்ப வர்கள் ஆதிதிராவிடராக இருப்பின், http://appli cation.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங் குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரி யில் நிலம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், இது தொடர் பான விவரங்கள் அறிய, மாவட்ட மேலாளர் அலுவ லகம், தாட்கோ, காட்டு புது குளம், பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக் கோட்டை அலுவலகத்தை நேரிலோ அல்லது 04322-221487 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரி வித்துள்ளார்.