பெரம்பூர், மே16- சென்னை புளியந் தோப்பு டிம்லர்ஸ் சாலை யில் உள்ள சென்னை மாநக ராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஐந்து கடைகள் இயங்கி வருகின் றன. பழனி, ஜோதி மற்றும் ராமு உள்ளிட்ட சிலர் 4 கடை களை மரக்கடைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் 4 கடைகளுக்கும் சேர்த்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கிவைத் துள்ளனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி திரு விக.நகர் மண்டல அலுவலர் உத்தரவின்படி, உதவி வரு வாய் அலுவலர், உரிமம் ஆய்வாளர்கள் நேரடியாக வந்து 4 கடைகளுக்கும் சீல் வைத்தனர். வாடகை பணத்தை கட்டிவிட்டு கடையை திறந்து கொள் ளும்படி நோட்டீஸ் வழங்கி யதுடன் அந்த பிரதிகளை கடைகளுக்கு முன்பு ஒட்டிவிட்டு சென்றனர். ‘’மாநகராட்சிக்கு சொந்த மான வணிக வளாகத்தில் உள்ள கடைகள் கண்டறியப் பட்டு முறையான வாடகை பாக்கி செலுத்தவில்லை என்றால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும்’’ என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ள னர்.