பெரம்பலூர், ஜன.19- 1982 ஆண்டு ஜனவரி 19 அன்று தொழிற்சங்கங்கள் நடத்திய அகில இந்திய வேலை நிறுத்த பேராட்டத்தின்போது விவசாயிகளின் பேரணியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு சிஐடியு, விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் அ.ரெங்கநாதன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.கலையரசி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் நகரச் செயலாளர் சிவானந்தம், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.