districts

img

அடுத்தடுத்து இறந்த அரசு வழங்கிய கறவை மாடுகள்

உதகை, ஜன.16- பந்தலூர் பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா கறவை மாடுகள் அடுத்தடுத்து இறந்ததால் அப் பகுதி பழங்குடியின மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின யினர் நலத்துறை சார்பில் ஆயிரத்திற்க் கும் மேற்பட்ட பழங்குடியின மக்க ளுக்கு இலவச கறவை மாடுகள் வழங் கப்பட்டன. இந்நிலையில், இலவச மாக வழங்கப்பட்ட மாடுகள் அனைத் தும் வயதானதாகவும், நோய்கள் தாக்கப்பட்டும், வளர்ப்பதற்கு தகுதி யில்லாத மாடுகளாகவும் உள்ளதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுவரை கூடலூர், பந்தலூர் பகுதி யில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதால் அப்பகுதி பழங்குடியின மக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். இதுகுறித்து பழங்குடியின பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற் கும், கால்நடை பராமரிப்புத் துறையினருக்கும் பல்வேறு  புகார்கள் தெரிவித்தும், இதுவரை எந்தவித நட வடிக்கையும் எடுக்காமல் அலட்சிய மாக இருந்து வருகின்றனர். இதனி டையே, தற்போது பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை பகுதியிலும் விலையில்லா கறவை மாடுகள் இறந்த தால், அப்பகுதி மக்கள் மேலும், வேதனை அடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.