நாமக்கல். மே 14- எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பள்ளிகள் முன்பு சாலை விபத்தை தடுக்க வேகத்தடை அமைக் கக்கோரி எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்றது. இந்த சாலை விரிவாக்க பணிக்கு முன்பாக அப்பகுதியில் இருந்த அரசு பள்ளியின் முன்பு வேகத்தடை இருந்தது, ஆனால் புதிய சாலை அமைக் கப்பட்ட பின்னர் அப்பகுதியில் வேகத் தடை அமைக்காத காரணத்தினால் அப் பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பும், ஊராட்சி ஒன்றிய துவக் கப் பள்ளி செல்லும் வழியிலும், ஆத்து மேடு மற்றும் மூலக்கடை யூனியன் ஆபீஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து சாலை விபத்துகள் நடை பெற்று வருகின்றன. குறிப்பாக மாணவர் கள், ஆசிரியர்கள் உட்பட பலர் விபத் துக்குள்ளாகி உள்ளனர். ஆகவே உடனடியாக பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடா சலம் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி துவக்கி வைத் தார். ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ. தேவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ஜீ.பழனியம்மாள், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் பி. மாரிமுத்து, ஏ ஆ.ரகமத், ஆர்.ரமேஷ், பி.கிட்டுசாமி, எஸ்.சக்தி வேல், ஈஸ்வரன், விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து திருச்செங்கோடு டிஎஸ்பி சீனிவாசன், வட்டாச்சியர் அப் பன்ராஜ், எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் லட்சுமணன், காவல் ஆய்வா ளர் செந்தில்குமார், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உட்பட பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட் டப்பட்டதை தொடர்ந்து வாபஸ் பெறபட் டது. நிறைவாக, மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.