districts

img

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பெட்டிகளின் இணைப்பு துண்டிப்பு கன்னியாகுமரி செல்ல பயணிகள் அவதி

நாகர்கோவில், அக்.27- சென்னையில் இருந்து வரும் கன்னியாகுமரி விரைவு ரயில் வியாழனன்று (அக்.27) அதிகாலை 5.20 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயிலில் இருந்து பயணிகள் இறங்கிய பிறகு கன்னியாகுமரிக்கு செல்லும் பய ணிகள் மட்டும் ரயிலில் அமர்ந்தி ருந்தனர். நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து நீண்ட நேரம் ஆகியும் ரயில் புறப்படவில்லை. ரயிலில் இருந்த பயணிகள் ரயிலை விட்டு இறங்கினர். இது குறித்து விசாரித்த போது என்ஜின் பெட்டி க்கும் அதனுடைய இணைப்பு  பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே ஊழி யர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துண்டிக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆனதால் ரயிலில் இருந்த பெரும்பாலான பயணிக ளும் ரயிலை விட்டு இறங்கினர். பின்னர் அவர்கள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலமாக கன்னியா குமரிக்கு புறப்பட்டு சென்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட இணைப்பை சரி செய்தனர். ஆனாலும், அதிகாலை சூரிய உதயத்தைக்காண வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.