districts

img

மாற்றுத் திறனாளி வீட்டுக்கு குடிநீர் மறுப்பு பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள்

நாகர்கோவில், டிச.24- மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கவுரவத்தோ டும் பாகுபாடின்றியும் நடத்தப்பட வேண்டும் எனக்  கூறுகிறது தமிழ்நாடு அரசின் கொள்கை குறிப்பு 2021-2022. இது மாற்றத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 இன்  அடிப்படையில் அரசு மேற் கொண்டுள்ள நிலைப்பாடு. ஆனால் அதிகார- ஆதிக்க சக்திகளின் முன்னால் எந்த  சட்டமும் செல்லாது என்ப தற்கு சான்றாக குமரி மாவட்  டத்தில் கடந்த 4 ஆண்டு களாக குடிநீர் இணைப்பு பெற அலைந்து கொண்டி ருக்கிறது ஒரு மாற்றுத்திற னாளி குடும்பம். கன்னியாகுமரி மாவட் டம் இராஜாக்கமங்கலம் ஒன்றியம் எள்ளுவிளை ஊராட்சி வைரா குடியி ருப்பு கிராமத்தில் வசிப்ப வர் ஜி.ஜெபசிங் (49). 2019  இல் ஜல்ஜீவன் திட்டத்தில் இவருக்கு குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவாகி உள்  ளது. ஆனால், இவரது வீட் டுக்கு செல்லும் பொதுப் பாதையை அருகில் வசிக் கும் சாம் ராபின்சன் என்பவர் சொந்தம் கொண்டாடி குழாய் பதிக்க எதிர்ப்பு தெரி வித்து வருகிறார். அதிகாரி களும் அவருக்கு உடந்தை யாக செயல்பட்டு வருவதாக ஜெபசிங் தெரிவித்துள்ளார். கடந்த சுமார் 4 ஆண்டுகளாக பிடிஓ முதல் மாவட்ட ஆட்சி யர் மூலம் பிரதமர் வரை மனுக்கள் அனுப்பியுள்ளார். ஆனாலும், மாற்றுத்திற னாளியான தனக்கு எதிரான பாகுபாடு நீடிக்கிறது என்கி றார். ஜெபசிங் வீடு வரையி லான தெருவில் காங்கிரீட்  தளம் அமைக்க பஞ்சாயத்  தில் தீர்மானம் நிறைவேற்றப்  பட்டுள்ளது. இதனை ஆர்டிஐ  தகவல் உறுதி செய்துள்ளது. ஆனாலும் ஊராட்சிமன்ற தலைவர் முதல் பிடிஓ வரை  மாற்றுத்திறனாளிக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதை மறுத்து வருகிறார்கள். தெருவை மட்டுமல்ல தெரு விளக்கையும் தனதாக்கி காம்பவுண்ட் சுவர் எழுப்பி யிருப்பதை மின்சார வாரிய மும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஞாயிறன்று (டிச.25) காலை ஜெபசிங் வீட்டில் இல்லாதபோது  நேரில் சென்று அவரது மனை வியிடம் பாதையை விட்டுத் தருமாறு சாம் ராபின்சன் மிரட்டல் விடுத்துள்ளதாக இராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளார்.
ஜன.3 குடும்பத்துடன் காத்திருப்பு
கிராமத்தில் உள்ள சுமார்  250 வீடுகளுக்கும் குடிநீர்  வழங்கப்பட்டுள்ள நிலை யில் மாற்றுத்திறனாளி ஜெப சிங் குடும்பத்திற்கு மட்டும்  பாகுபாடு காட்டப்படுகிறது. இதற்கு எதிராக ஜனவரி 3  ஆம் தேதி இராஜாக்கமங்க லம் பிடிஓ அலுவலகம் முன்பு குடும்பத்துடன் காத்தி ருப்பு போராட்டம் நடை பெற உள்ளது. மாற்றுத்திற னாளிகள் உரிமையில் தமி ழக அரசின் கொள்கை நிலைப்பாட்டை மதிக்காத அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறானிகள்  மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின்  கன்னியாகுமரி மாவட்ட தலைவர் கே.முகமது பெரோஸ் கான் வலியுறுத்தியுள்ளார்.