நாகப்பட்டினம், மே 13 - அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க நாகை மாவட்ட மாநாடு நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு வழக்கறிஞர் கு.காளிதாசன் தலைமையேற்றார். மாநாட்டை கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாள ராக ப.சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட தலைவ ராக கே.அன்புராஜ், பொருளாளராக ஏ.வி. எம்.பகத்சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும். வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படுகிற ஊக்கத் தொகை ரூ.3 ஆயிரத்தை சரியாக பரிசீலித்து வழங்க வேண்டும். நாகப்பட்டினம் புதிய நீதிமன்ற வளாகத்திற்கு காம்பவுண்ட் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.