நாகப்பட்டினம், ஜூலை 18 - நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி களில் அடிப்படை வசதிகள் வேண்டி ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவல கங்களின் வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைகள் அமைத்துத் தர வேண்டும். குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குறை பாடுகளை களைய வேண்டும். தினசரி கூலி ரூ. 381-ஐ முழுமை யாக வேண்டும். வேதாரண்யம் பகுதி யில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக் கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீரை தங்கு தடையின்றி வழங்க வேண்டும். ஏழை-எளிய பெண்களின் திரு மணத்திற்கு அரசு வழங்கி வந்த தாலிக்கு தங்கம் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் வடக்கு ஒன்றி யம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து கலந்து கொண்டார். திருக்கண்ணங்குடி, வடகரை, வங்காரமாவடி, இருக்கை, கீழ்வே ளூர், வடகரை, இராதாமங்கலம் உள்ளிட்ட 13 கிளைகளில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.என்.அபுபக்கர், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பாண்டியன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ். சுபாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஆவராணி, ஆலங்குடி, அகர ஓரத்தூர், பாப்பாகோவில், மகா தானம், அகலங்கன், வடுகச்சேரி ஆகிய பகுதிகளில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முருகையன், நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வடி வேல் ஆகியோர் கலந்து கொண்ட னர். கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் சார்பில் சாட்டியக்குடி, அணக்குடி, மோகனூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில், மாவட்ட குழு உறுப்பினர் எம்.என்.அம்பிகா பதி, ஏ.சிவகுமார், கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தை யன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கீழை யூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல் அஜீஸ், பி.சேகர், ஏ.உமா நாத், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூண்டி, காமேஸ் வரம், பி.ஆர்.புரம், காரப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரை, பிராந்தியங்கரை, கரி யாப்பட்டினம், கத்தரிப்புலம், பஞ்ச நதிக்குளம், வண்டுவஞ்சேரி, ஆயக் காரன்புலம், தென்னம்புலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கட்சி மாவட்ட செயற்குழு கோவை சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் வி.அம்பிகாபதி, ஏ. வெற்றியழகன், பி.எஸ்.பன்னீர் செல்வம், இளையபெருமாள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கஸ்தூரி உட்பட 3 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.