தரங்கம்பாடி, ஜூன் 13- செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம், திருவிளையாட்டம் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டட பணி துவக்க விழா நடை பெற்றது. விழாவிற்கு ஒன்றிய ஆணையர் அருண் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் சுகுணா கண்ணன் வரவேற்று பேசினார். பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் ரூ 20 லட்சத்து 65 ஆயி ரம் செலவில் கட்டப்பட உள்ள புதிய கட்டட பணியை துவக்கி வைத்தார். விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய பொறியாளர் தியாகு, ஊராட்சிதுணைத் தலைவர் ஜமுனாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.