நாகப்பட்டினம், செப்.16 - தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ வியாழனன்று மதுரையில் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் காலை உண வுத் திட்டம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஊட்டச் சத்து நிலையை உயர்த்தவும், குழந் தைகள் பசியின்றி பள்ளிக்கு வரு வதை உறுதி செய்யவும், வேலை க்கு செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையைக் குறைக்கவும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வும் பெரிதும் உதவும். இந்தியாவி லுள்ள மாநிலங்களில் இத்திட்டம் முன்னோடி திட்டமாகும். இதனொரு பகுதியாக வெள்ளிக் கிழமை தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் டாட்டா நகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்த பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பி னர் ஆளூர் ஷாநவாஸ், நாகை நகர்மன்றத் தலைவர் இரா.மாரி முத்து ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 8 நகராட்சி தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 1,322 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். திட்டத்தினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் வை.முத்துராஜா, மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கூறைநாடு கவி ஞர் வேதநாயகம் நகராட்சி தொடக் கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு காலை உணவு வழங் கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மயிலாடு துறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் கூட்டுறவு காலனி, மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர் களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசின் தலை மைக் கொறடா முனைவர் கோவி. செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொ டங்கி வைத்தனர். சட்டமன்ற உறுப் பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீல மேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், முதன்மை கல்வி அலுவலர் சிவ குமார் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சிக்குட் பட்ட முத்துநகர், பெரம்பலூர் கிழக்கு மற்றும் பெரம்பலூர் மேற்கு ஆகிய 3 தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 112 பள்ளிக் குழந்தைகளுக்கு முதல மைச்சரின் சிறப்புத் திட்டமான காலை உணவுத் திட்டத்தினை முத்து நகர் தொடக்கப் பள்ளியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத் தார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை வகித் தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப் பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சி.ராஜேந்திரன் ஆகி யோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செங் குந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளி யில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மற்றும் எம்எல்ஏ க.சொ.கண்ணன் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறி மாணவர்களு டன் அமர்ந்து உணவருந்தி இத்திட் டத்தை தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் கீழ் முதல் கட்ட மாக அரியலூர் மாவட்டத்தில் ஜெயங் கொண்டம் தாலுகாவில் உள்ள 9 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயி லும் 464 மாணவ-மாணவி களுக்கு காலை உணவு வழங்கப் பட்டது. தொடர்ந்து ஜெயங்கொண் டம் நகராட்சி, 10-வது வார்டில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காலை உணவுத் திட்டத் தினை துவக்கி வைத்தனர்.