நாகப்பட்டினம், ஜூன் 4 - நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் திருக்குவளையில் இருந்து மன்னார் குடி வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கும் விழா நடைபெற்றது. இதனை கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி துவக்கி வைத்தார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை யில் அவர் பிறந்த தினமான ஜூன் 3 அன்று திருக்குவளையில் இருந்து மன்னார்குடி வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி புதிய வழித்தடத்தில் இயங்கும் பேருந்து சேவையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கெளவுதமன். நாகை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ், வேளாங் கண்ணி பேரூராட்சி தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், திமுக இலக்கிய அணி பொறுப்பா ளர் இல.மேகநாதன், திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் இல.பழனியப்பன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.