மன்னார்குடி, மார்ச் 9 - பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகிய நீடாமங்கலம் இளைஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் புதிதாக இணந்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கிஷோர்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஏ.அருண்குமார், ஒன்றிய பொருளாளர் பாரதி மோகன் முன்னிலை வகித்தனர். வாலிபர் சங்கத்தில் இணைந்த 90 இளைஞர்களை சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு சால்வை அணிவித்து வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வேலவன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.இளங்கோவன், மாவட்ட ஒன்றிய துணை இணை நிர்வாகிகள் ஜே.ஜெயராஜ், எஸ்.ராஜா, சி.குமார், ஆர்.சரவணன், எஸ்.சதீஷ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.