திருவனந்தபுரம், டிச.2- மசூதிகளை மையமாக வைத்து அரசுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு முஸ்லிம் லீக் அழைப்பு விடுத்திருப் பது பெரிய அளவிலான விளைவு களை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வகுப்புவாத பிளவுகளுக்கும், மத ரீதி யிலான அணிதிரட்டலுக்கும் வழிவகுக் கும். இந்த நடவடிக்கை மிகவும் ஆபத் தானது. இது கோவில்களில் சங் பரிவார பிரச்சாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் முஸ்லிம் லீக்கின் குறுகிய வகுப்புவாத நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட் டுள்ளது. வழிபாட்டு இடங்களை அரசி யல் எதிர்ப்புகளுக்கு பயன்படுத்துவது நெருப்புக் கொள்ளியால் தலை சொறிவது போன்றதாகும். அரசியல் ஆதாயத்திற்காக வழிபாட்டுத் தலங் களை துஷ்பிரயோகம் செய்யும் இந்த நடவடிக்கையை விசுவாசிகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் வெள்ளிக்கிழமை தொழு கையுடன் அரசுக்கு எதிரான விழிப்பு ணர்வுப் பிரச்சாரத்தையும் நடத்த உள்ளதாக லீக் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் லீக் ஒரு அரசியல் கட்சியே தவிர மதவாத அமைப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சங்பரிவாரத்தின் வட இந்திய மாதிரியை இவர்கள் கேர ளாவில் செயல்படுத்துகிறார்கள். கேர ளாவில் உள்ள கோவில்களை பாஜக அரசியல் பிரச்சார மையங்களாக ஆக் கினால், லீக் மற்றும் பிற அமைப்பு களால் என்ன நியாயம் கூற முடியும்? வெள்ளிக்கிழமை தொழுகைக் காக மசூதிக்கு வருபவர்கள் அனைத்து அரசியல் நம்பிக்கை கொண்டவர் கள். எனவே, அவர்கள் அரசுக்கு எதி ராகப் பிரச்சாரம் செய்தால், விசுவாசி கள் கேள்வி கேட்க முன்வருவார்கள். இது மோதலுக்கு வழிவகுக்கும். கடந்த காலங்களில் வழிபாட்டுத் தலங்களை அரசியல் நோக்கத்திற்காக பயன் படுத்த லீக் முயன்றது. அந்த நேரத் தில், விசுவாசிகளே அதற்கு இடம ளிக்காமல் பாதுகாத்தனர்.
வக்பு வாரிய நியமனம் பிஎஸ்ஸிக்கு விடப்பட்டதே இப்புதிய நகர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முஸ்லிம் மத அமைப்பு களின் தலைவர்கள் முதலமைச்சரு டன் கலந்துரையாடியுள்ளனர். அனைத்து கவலைகளும் களையப் பட்டால் மட்டுமே இது மேற்கொள்ளப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லீம் சமூகத்தில் படித்த புதிய தலைமுறை, சிபிஎம் உடன் நெருங்கி வருவது லீக் போன்றோரை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. இந்த போக்கை தடுக்க நம்பிக்கை உணர்வை லீக் பயன்படுத்திக் கொள் கிறது. வகுப்புவாத பிளவுகளை உரு வாக்கி ஆதாயம் அடையும் நோக்கில் நம்பிக்கையாளர்களை அரசுக்கு எதி ராகத் தூண்டிவிடுவதுதான் லீக் தலை மையின் நிலைப்பாடு. லீக் ஒரு மதச் சார்பற்ற கட்சி என்று கூறுவது வெற்று வார்த்தை என்று நிரூபிக்கப்பட்டுள் ளது. முஸ்லீம் லீக்கின் அழைப்பு குறித்து காங்கிரஸ் உட்பட யுடிஎப்- இன் மற்ற கட்சிகள் கருத்து தெரி விக்க வேண்டும் என்றும் சிபிஎம் மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.